மருத்துவர் பைரவி செந்திலிடம் 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வில்சன் நோட்டீஸ் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
நடிகை மற்றும் மாடல் அழகியான ரைசா வில்சன் தமிழ் சினிமாவில் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களு மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் நடிகை ரைசா வில்சன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தோல் பரமாரிப்பு மருத்துவமனையில், ஃபேசியல் செய்வதற்காக சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள மருத்துவர் பைரவி செந்திலிடம், ஃபேசியல் செய்ய சொன்னதாகவும், அவர் தனக்கு வேண்டாத சில தவறான சிகிச்சைகளை அளித்ததால், தனது முகம் வீங்கியிருப்பதாகவும் புகைப்படத்துடன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
மீண்டும் முகப்பொலிவு பெற ரூ, 1,27,000 செலுத்தி சிகிச்சை எடுத்த பிறகும் ரத்த கசிவு மற்றும் முகம் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக நஷ்ட ஈடாக ரூ.1 கோடி மருத்துவர் பைரவி செந்தில் தரவேண்டும் என்று நடிகை ரைசா வில்சன் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அதுமட்டுமில்லாமல் 15 நாட்களில் ரூ. 1 கோடி தராவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று ரைசாவின் வழக்கறிஞர் நோட்டிஸில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் பைரவி செந்தில் கூறியது ” நான் ரைசாவுக்கு dermal fillers சிகிச்சை தான் அளித்தேன். அவருக்கு ஏற்கனவே நான் இந்த சிகிச்சை அளித்திருக்கிறேன். இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஒரு வாரம் முகம் வீங்கி இருக்கும். அதன் பிறகு தானாகவே சரியாகிவிடும். இது ரைசாவுக்கும் தெரியும். அவர் ஆனால் அவர் என்னை பணம் கேட்டு மிரட்டுகிறார்” என்றும் கூறியுள்ளார்.
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…
சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும்…
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…
சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார். "வேலியன்ட்" (Valiant)…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்…