இந்த மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்.!
Weather update: அடுத்த மூன்று மணி நேரத்தல் மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க நேற்று முதல் சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இன்றயை தினம் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அங்கு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது, சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.