கொரோனா தடுப்பூசி போடாமல் தவிர்த்து வரும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என பாகிஸ்தான் நாட்டு ரயில்வே துறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நாடுகளும் அறிவுறுத்தி வரும் நிலையில் பாகிஸ்தானிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் தவிர்த்து வரக்கூடிய இரயில்வே பணியாளர்களுக்கு அந்நாட்டு ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத ரயில்வே துறை பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தடுப்பூசி போட விரும்புவர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…