சரணடைந்தார் மோடி-திட்டம் எதுவுமில்லை! ராகுல் தாக்கு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உலகளவில் 99 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா,உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது 100 லட்சத்தை எட்ட வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
அதன்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 98,98,220ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 53,52,383ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சகம் வைரஸ் பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 18,552 ஆகவும்,384 பேர் பலியாகியுள்ளதாகவும்,10,244 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் இதுவரை இத்தொற்றுக்கு மொத்தம் 15,685 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 2,95,881 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறித்தும்,பிரதமர் மோடி குறித்தும் கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.அவர் பதிவிட்டுள்ளதாவது:கொரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் பேரழிவை எதிர்த்து போராட மோடி மறுக்கிறார். நாட்டின் புதிய பகுதிகளிலும் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசிடம் எந்தவித திட்டமும் இல்லை என்று விமர்சித்து ட்விட் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…
February 12, 2025![Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jasprit-Bumrah-Varun-chakaravarthy-Yashasvi-jaiswal.webp)
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)