ராகுலுக்கு ஏன்!? தலைவர் அவர்களே!குஷ்பு எதிர்-கருத்து?..கசியும் காங்.,வட்டம்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சச்சின் பைலட் அல்லது ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை தான் காங்.,நியமித்திருக்க வேண்டும்’ என்று கருத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆதரவு அளித்ததால் அவருக்கு எதிராக தமிழக இளைஞர் காங்கிரசார் சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்., தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். இதனால் அக்கட்சியின் தற்காலிக தலைவராக மீண்டும் சோனியா காந்தியே செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ராகுல் காந்தி மீண்டும் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று சச்சின் பைலட் வலியுறுத்தி வருகிறார். ஆனால் மும்பையை சேர்ந்த காங்கிரஸ் பேச்சாளர் சஞ்சய்ஜா காங்., தலைவராக ராகுலுக்கு பதிலாக சச்சின் பைலட் அல்லது பா.ஜ.விற்கு சென்ற ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரில் யாராவது ஒருவருக்கு தலைவர் பதவி வழங்கியிருக்கலாம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாக பதிவு செய்திருந்தார்.
இவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வரும் நடிகை குஷ்பு தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஆதரவு தெரிவித்து பதிவு செய்திருந்தார். இதற்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா தன் டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரவித்துள்ளார்.
காங்.,தலைவர் பதவியில் நேருவின் குடும்ப வாரிசுகள் தான் தொடர வேண்டும் என்பது கோடிக்கணக்கான தொண்டர்களின் விருப்பம். உட்கட்சி விவகாரத்தை சமூக வலைதளங்களில் விமர்சிக்கக் கூடாது. குஷ்புவின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கடுமையாக குஷ்புவை விமர்சித்தும் குறிப்பிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து சமூக வலைதளங்களில் குஷ்புக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஹசன் மவுலானாவுக்கு பதிலடி தரும் வகையில் குஷ்புவும் கிளிப்பிள்ளை போல சாவி கொடுத்து சிலர் பேச வைக்கப்படுகின்றனர் என்று பதில் ட்விட்டை போட்டு பதிவிட்டார். இதனால் இரு தரப்பினர் இடையிலான மோதல் நீடிக்கிறது.