வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பிலவ வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி (மார்ச் 21) அன்று மதியம் 3.02 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. தற்போது ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். பொதுவாக ராகு மற்றும் கேது இருவரும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்குவர். அந்நேரத்தில் ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கொடுப்பார்கள்.
மேஷம்: உங்கள் ராசிக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு வருகிறார். உங்கள் வாழ்க்கையில் இனி செல்வம் தழைத்தோங்கும். செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு அதிகம். இதுவரை திருமண வரன் பார்த்து அமையாமல் இருந்தால் இனி கவலை வேண்டாம். விரைவில் திருமணம் நடைபெறும். உத்தியோக வேலையில் இடமாற்றம் ஏற்படலாம். செலவுகளும் ஏற்படலாம். மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் எதிர்பார்த்த இடத்தில் சீட் கிடைக்கும். உங்களது துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நீங்கள் செய்யும் வேலையில் கவனம் தேவை.
ரிஷபம்: இதுவரை உங்கள் ராசியில் ராகு அமர்ந்திருந்தார். இப்போது ராகு விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இந்த ஸ்தானத்திற்கு ராகு கேது வருவது உங்களுக்கு நன்மை தான். உடல் ஆரோக்கியம் மேம்படும். இதுவரை இருந்துவந்த மனக்குழப்பம் தீரும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். இனி நிம்மதியான தூக்கம் கிட்டும். உங்கள் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமணம் விரைவில் நடக்கும். தொழிலில் உள்ள நண்பர்களுடன் நல்ல சுமூகமான உறவு ஏற்படும். வெளிதொடர்புகள் அதிகரிக்கும். சிலர் எதிர்பார்த்தபடி வெளிநாடு பயணம் கிட்டும். கேதுவின் பெயர்ச்சியால் உங்களுக்கு வேலை மாற்றம் கிட்டும்.
மிதுனம்: தற்போது ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். இனி உங்களுக்கு எதிர்பாராத லாபம் கிட்டும். உங்களுக்கு இதுவரை இருந்த போட்டி, பொறாமைகளை அவர் ஒழித்து விடுவார். மேலும் கேது பூர்வ புண்ணிய ஸ்தலமான 5ல் வருகிறார். இது உங்களுக்கு யோகம் தான். இனி வரும் நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி கிட்டும். உங்களுக்கு வயிற்றில் இதுவரை இருந்து வந்த பாதிப்பு நீங்கும். உங்கள் குழந்தைகளால் மன வருத்தம் ஏற்படலாம். உங்களுக்கு எதிர்பார்க்காத லாபம் கிட்டும். உங்கள் குல தெய்வத்தை வணங்குவது மேலும் நன்மை தரும்.
கடகம்: இந்த ராகு கேது பெயர்ச்சியால் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி தான். இதுவரை தொழிலாளியாக நீங்கள் இருந்திருந்தால் இனி நீங்கள் தான் முதலாளி. அந்த அளவுக்கு உங்களுக்கு யோகம் கிட்டும். நீங்கள் எதிர்பார்த்தது போல் நினைத்த வேலை கிட்டும். நல்ல வேலையில் இருந்தால் சம்பள உயர்வு கிடைக்கும். அசையா சொத்து வாங்கும் யோகம் வரும். வீட்டில் சுப காரியங்கள் ஏற்படும். உங்கள் துணையுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உங்களுக்கு இருந்த கடன் சுமை குறைய தொடங்கும். காதலுக்கு இருந்த தடைகள் நீங்கும். தொழிலில் தடைகள் உண்டாகும். உயர் கல்வியில் தடை ஏற்படலாம். நிதானம் உங்களுக்கு அவசியம்.
சிம்மம்: இதுவரை பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்ட உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோச்சனம் கிடைக்க போகிறது. உங்களுக்கு கிடைக்கும் வருமானம் உயரும். நீங்கள் பார்த்து வந்த தொழிலில் இருந்த சண்டை, சச்சரவு, இடையூறு எல்லாம் அகலும். உங்களுக்கு இருந்து வந்த எதிரிகள் விலகுவர். உங்கள் குழந்தைகளுக்கு சுபகாரியம் நிகழும். குழந்தை பாக்கியம் கிட்டும். தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். ஆன்மீகத்தில் இருந்த நம்பிக்கை குறையலாம்.
கன்னி: இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு அதிர்ஷ்டத்தை வழங்கப்போகிறது. இனி நீங்கள் எதிர்பார்க்காத பண பொருள் சேரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஒரு சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படும். உங்கள் ராசிக்கு கேது 2 ஆம் வீட்டிற்கு வருகிறார். இனி உங்கள் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உடன் பிறப்புகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். ஆன்மீக நம்பிக்கை அதிக அளவு ஏற்படும். வெளிநாடு பயணம் ஏற்படலாம். உங்கள் துணையின் மூலமாக எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். பல் மற்றும் கண் சார்ந்த பாதிப்புகள் ஏற்படலாம்.
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…