ராகு-கேது பெயர்ச்சி 2022..!இந்த ராசிகளில் யாருக்கு கோடீஸ்வரனாகும் யோகம் உள்ளது..!துலாம்-மீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் ..!

Default Image

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பிலவ வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி (மார்ச் 21) அன்று மதியம் 3.02 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. தற்போது ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். பொதுவாக ராகு மற்றும் கேது இருவரும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்குவர். அந்நேரத்தில் ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கொடுப்பார்கள்.

துலாம்: துலாம் ராசிக்கு ராசி அதிபதி சுக்கிரன். கேது உங்கள் ராசிக்கும், 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகின்றனர். இதுவரை உங்களால் மற்றவர்களுக்கு எல்லா நன்மைகளும் கிட்டியது. இதன் பிறகு இந்த நிலை மாறும். உங்கள் ராசிக்கு கேது வருவதால் உங்களின் அந்தஸ்து உயரும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு தகுந்த வேலை கிட்டும். கிடைக்கும் வருமானம் திருப்தியானதாக அமையும். உங்கள் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்வீர்கள். கணவன்-மனைவிக்கு இடையே இருந்த சண்டைகள் நீங்கி ஒற்றுமையாக வாழ்வீர்கள். மேலும் நன்மைகள் நடக்க வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களே, கேது விரைய ஸ்தானமான 12 ஆம் இடத்திலும், 6 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகின்றனர். இதுவரை ஏழரை சனியால் பட்ட கஷ்டங்கள், ஜென்ம கேதுவால் ஏற்பட்ட வலிகள் உங்களுக்கு முடிவுக்கு வரப்போகிறது. இனி உங்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும். மன கஷ்டத்தில் இருந்த அனைவருக்கும் வெற்றி வர போகிறது. இதுவரை இருந்துவந்த கடன் தொல்லை, ஆரோக்கிய பாதிப்புகளுக்கு இனி முற்றுப்புள்ளி கிட்டும். தீராத நோய் தீரும். தொழில் முயற்சிகள் கை கூடும். எவ்வளவு வேலை தேடியும் சரியான வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வீடு மனை வாங்க கூடிய யோகம் உண்டு. திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் கை கூடி வரும். புத்திர பாக்கியம் கிட்டும். மேலும் நன்மைகள் நடக்க செவ்வாய்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களின் ராசி அதிபதி குரு. உங்கள் ராசிக்கு கேது 11ஆம் வீட்டிற்கும், ராகு 5ஆம் இடத்திற்கும் வருகிறார்கள். இதுவரை உங்களுக்கு வருமானம் இருந்தாலும் மன நிம்மதி இல்லாமல் இருந்திருக்கும். தற்போது ராகு கேது பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையாக மாறும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் கேது வருவதால் நீங்கள் தொட்டது துலங்கப்போகிறது. அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. உங்கள் ராசிக்கு 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருகிறார். அதனால் முன்னோர் வகையில் இருந்த தோஷம் நீங்கும். மேலும், நன்மைகள் நடக்க வியாழக்கிழமை ராகுகாலத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

மகரம்: மகர ராசிக்காரர்களின் ராசி அதிபதி சனி பகவான். உங்கள் ராசிக்கு கேது 10 ஆம் வீட்டிற்கும், ராகு 4 ஆம் வீட்டிற்கும் வருகிறார்கள்.உங்களுக்கு இதுவரை இருந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இனி தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தாய் வழியில் தேவைற்ற செலவுகள் ஏற்படலாம். வீட, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். உங்களின் பழைய கடன்கள் அடைப்படும். வரவுகள் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றகரமாக அமையும். பதவி உயர்வு கிடைக்கும். மேலும் நன்மைகள் கிடைக்க சனிக்கிழமை ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களின் ராசி அதிபதி சனி பகவான். உங்கள் ராசிக்கு ராகு 3ஆம் இடத்திலும், கேது 9ஆம் இடத்திற்கும் வருகிறார்கள். இனி ராகு உங்களுக்கு யோகத்தை அள்ளி அள்ளி வழங்க போகிறார். உங்களுக்கு புது தைரியம், தெம்பு, செழிப்பான வாழ்க்கை கிடைக்கும். உங்களின் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றி கிட்டும். உங்களை பார்த்து கேலி செய்தவர்கள் எல்லாம் இனி உங்களின் உச்சத்தை பார்த்து வாயடைத்து போவார்கள். இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் தேவையான நேரத்தில் உங்களை தேடி வந்து உதவி செய்வார்கள். சொந்தங்களால் வீட்டில் சந்தோசம் பொங்கும். மேலும், நன்மைகள் நடக்க வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள். சனிக்கிழமையன்று ராகு காலத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

மீனம்: மீன ராசிக்காரர்களின் ராசிக்காரர்களின் ராசி அதிபதி குரு. உங்கள் ராசிக்கு ராகு குடும்ப ஸ்தானத்திற்கும், கேது ஆயுள் ஸ்தானத்திற்கும் வருகிறார்கள். இனி உங்களுக்கு திடீர் பணவருமானம், திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது. அதே நேரத்தில் சேமிப்பு குறையும். பணவரவிற்கேற்ற செலவுகளும் வரும். நீங்கள் தொழில் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உங்களின் கோபம், வெறுப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துங்கள். இது வீட்டிற்கும் நல்லது. வெளி உலகிற்கும் நல்லது. பணம் தொடர்பாக வாக்கு கொடுக்க வேண்டாம். நன்மைகள் நடக்க ராகு காலத்தில் ராகு கேதுவிற்கு அர்ச்சனை செய்து வாருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest