சூரரைப்போற்று படத்தை பார்த்து விட்டு புகழ்ந்து தள்ளிய ரஹானே…!
இன்ஸ்டாகிராம் ரஹானே ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு கேள்விகளுக்கு பதிலளித்து வரும்பொழுது ரசிகர்கர் ஒருவர் தமிழில் எந்த படம் பார்த்தீர்கள் என்று கேட்டதிற்கு சூரரைப்போற்று என்று பதிலளித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதில் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பலரும் காயமடைந்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேன் மைதானத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த சுற்றுப்பயணத்தை முடித்து இந்திய வீரர்கள் தாயகம் திரும்பிய நிலையில், அடுத்ததாக உள்நாட்டில் இங்கிலாந்தை சந்திக்கவுள்ளது. மேலும் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் வைத்து நடைபெறவுள்ளது. இதற்காக வலைப் பயிற்சி ஆரம்பிக்க இன்னும் சில நாட்கள் இருப்பதால் இந்திய அணியினர் அவரவரது குடும்பங்களுடன் நேரம் செலவிட்டு, ரசிகர்களுடன் சமூக ஊடகங்களில் உரையாடியும் வருகின்றார்கள்.
அந்த வகையில் தற்போது கேப்டன் ரஹானே இன்ஸ்டாகிராகிமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் அப்போது ஒரு ரசிகர் ஒருவர் அவரிடம் “சென்னைக்கு உங்களை வரவேற்கிறோம் தமிழ் திரைப்படம் ஏதாவது பார்த்தீர்களா என்று கேட்டார்.” அதற்கு பதிலளித்த ரஹானே ஆம் நான் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்தேன் சப்டைட்டில் உதவியுடன் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது படத்தில் சூர்யா மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். என்று கூறியுள்ளார்.