ராசி கேது பெயர்ச்சி(21.03.2022)எந்த ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டும்.!யாருக்கு அதிக நன்மை..!இன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம்..!

Published by
Sharmi

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பிலவ வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி (மார்ச் 21) இன்று மதியம் 3.02 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. தற்போது ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். பொதுவாக ராகு மற்றும் கேது இருவரும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்குவர். அந்நேரத்தில் ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கொடுப்பார்கள்.

யாருக்கெல்லாம் வாழ்க்கையில் என்ன மாற்றம் வரப்போகிறது, எந்த ராசிக்கு அதிர்ஷ்டம், அதிக நன்மை கிடைக்கும், எந்த ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.  மேலும், இன்று உச்சரிக்க வேண்டிய முக்கிய மந்திரம் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

ராகு கேது பெயர்ச்சியில் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்: ராகு கேது பெயர்ச்சியில் தோஷ பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிக்காரர்கள் மேஷம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மகரம், மீனம். இவர்கள் அருகில் உள்ள நவக்கிரகம் ஆலயத்திற்கு சென்று பரிகார பூஜைகளில் கலந்து கொண்டு உங்கள் ராசி நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு நன்மை அளிக்கும்.

ராகு கேது பெயர்ச்சியில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்: ராகு கேது பெயர்ச்சியில் கடகம், மகரம், மேஷம், மீனம், சிம்மம் இந்த ராசிக்காரர்கள் சற்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் ரீதியாக ஆரோக்கிய பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சிறு பாதிப்பு தானே என்று அலட்சியம் செய்யாதீர்கள்.

ராகு கேது பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள்: ரிஷபம், விருச்சிகம், கும்பம். இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் இனி நடப்பவை எல்லாம் நன்மைக்கே. இதுவரை இருந்து வந்த அனைத்து பாதிப்புகளும் விலகி பல்வேறு அதிர்ஷ்டங்ள், நன்மைகள் நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு இந்த மந்திரத்தை உச்சரித்தால் உங்களுக்கு நன்மை கிட்டும். இதனை வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து அமர்ந்து 11 முறை உச்சரிக்க வேண்டும். இதனை தினமும் கூட உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாக கிரக தோஷத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

கருட மந்திரம்:

ஓம் ஸ்ரீ காருண்யாய

கருடாய வேத ரூபாய

வினதா புத்ராய

விஷ்ணு பக்தி பிரியாய

அமிர்த கலச ஹஸ்தாய

பஹு பராக்ரமாய

பக்ஷி ராஜாய சர்வ வக்கிர

சர்வ தோஷ, விஷ சர்ப்ப

விநாசனாய ஸ்வாஹா

சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை உச்சரித்து அனைவரும் நன்மை பெறுங்கள்.

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

11 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

12 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

13 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

14 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

16 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

16 hours ago