ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ராகவா லாரன்ஸின் அடுத்த முயற்சி..!
சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி செய்யும் வகையில் ராகவா லாரன்ஸின் அடுத்த முயற்சி.
உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஒரே விஷயம் கொரோனா. தற்போது மே 3வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதில் நடிகரான ராகவா லாரன்ஸ் 3கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து அவர் மீண்டும் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் துப்பரவு பணியாளர்களுக்க்காக ரூ. 25 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினார். மேலும் சென்னையில் உள்ள செங்கல்பேட்டை விநியோகஸ்தர்களின் சங்கத்திலுள்ள உறுப்பினர்களுக்கு ரூ. 15 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியிருந்தார். மேலும் தென்னிந்தியா நடிகர் சங்கத்திற்கு மீண்டும் ரூ. 25 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியிருந்தார். ராகவா லாரன்ஸ் சென்னையில் உள்ள ராயபுரம் மக்களுக்கு ஏற்கனவே ரூ. 75லட்சத்தை நிதியுதவியாக வழங்கியிருந்தார். மேலும் அதே பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். மாற்றுத் திறனாளிகளான 50பேருக்கு தலா ரூ. 25 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார். அடுத்ததாக ரூ. 50 லட்சத்தை அம்மா உணவகத்திற்கு வழங்கியுள்ளார்.
ஆனால் தற்போதும் அவருக்கு அழைப்புகள், வீடியோக்கள் வருவதாகவும், அவர்களுக்கு தேவை பணம் இல்லை சாப்பிடுவதற்கு தேவையான அரசி தான். சாப்பாடு இல்லாமல் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பலர் கஷ்டப்படுவதாக தெரிவித்தார். இதை என் குடும்பத்திடமும், நண்பர்களிடமும் பகிர்ந்த போது எனது சகோதரர் எல்வின் ஐடியா ஒன்றை கூறினார். ஒருவரால் மட்டும் உதவி செய்ய முடியாது, எனவே உதவி செய்ய வேண்டுமென்று நினைப்பவர்கள் அனைவரிடமும் கூறி நிதி திரட்டுவோம் என்று கூறினார். அதன்படி முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இதை கூறியதும் அவர் இந்த முயற்சிக்காக பாராட்டுகளை தெரிவித்தோடு, 100பை அரசி மூட்டைகளையும் கொடுத்து உதவியுள்ளார். அதனையடுத்து தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்க கோரி கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா மற்றும் பல நடிகர்களின் ரசிகர்களிடமும், அரசியல்வாதிகளிடமும், மக்களிடமும் கேட்டு கொண்டோம். நீங்கள் தரும் சிறிய தொகை கூட பல ஏழை எளிய மக்களின் வாழ்விற்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
— Raghava Lawrence (@offl_Lawrence) April 30, 2020