கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு உதவிய ராகவா லாரன்ஸ்..!

Published by
Ragi

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர்.

இதில் தென்னிந்தியா சினிமாயுலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக நிதியுதவி வழங்கியவர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை 4 கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கியுள்ளார்.இந்த நிலையில் தற்போது இவர்  கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்திற்கு உதவியுள்ளார். இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு வெற்றிகரமான பிரசவம். நமது அரசாங்கத்திற்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள். நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்.நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு தெரிந்த ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். எனவே அவரது கணவரும், மாமானாரும் என்னை அலைப்பேசியில் அழைத்து மருத்துவமனைக்கு செல்ல உதவிக் கேட்டார்கள்.

இத்தகவலை நான் மாண்புமிகு சுகாதார அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்களின் பி. ஏ. வான திரு. ரவி சார் அவர்களுக்கு தெரிவித்தேன். அவர் அவசரம் கருதி சம்பந்தப்பட்ட நண்பரின் இல்லத்திற்கே நேரில் சென்று, அந்த கர்ப்பிணி பெண்ணை அழைத்துப் போய் கீழ்ப்பாக்கம் கே. எம். சி. மருத்துவமனையில் சேர்த்தார். அப்பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த மருத்துவர்கள், உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை செய்து தாயையும், குழந்தையையும் வெற்றிகரமாக காப்பாற்றினர்.

இந்த பிரசவத்தில் அழகான, ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்து நலமாக உள்ளது. அப்பெண் கொரோனாவிலிருந்து கூடிய விரைவில் குணமடைவார் என்று மருத்துவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளனர். இந்த நேரத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி சார் அவர்களுக்கும், மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் திரு.

விஜயபாஸ்கர் அவர்களுக்கும், அவரது பி. ஏ. திரு. ரவி சார் அவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அத்துடன் மருத்துவர்கள் டாக்டர் ஜானகி, டாக்டர். ஐஸ்வர்யா, டாக்டர். மது, டாக்டர். சாந்தி, டாக்டர். லாவண்யா ஆகிய அனைவரும் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான நல் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இதை படிக்கும் ஒவ்வொருவரும் தயவுசெய்து அப்பெண் கொரோனாவிலிருந்து சீக்கிரமே குணமடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்யுங்கள், சேவையே கடவுள் என்று பதிவிட்டுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…

15 minutes ago

அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…

33 minutes ago

டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை! பாதுக்காப்பு நடவடிக்கைகள்…

சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

51 minutes ago

சென்னைக்கு அருகே 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம் – வானிலை மையம் தகவல்!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…

2 hours ago

குடை எடுத்துக்கோங்க… இந்த 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

சென்னை :  தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…

2 hours ago

LIVE : பள்ளி, கல்லூரிகள் விடுமுறை முதல் இன்றைய வானிலை நிலவரம் வரை.!

சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…

2 hours ago