கொரோனாவிலிருந்து குணமடைந்த ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகள்.!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டில் உள்ள குழந்தைகள் குணமடைந்து திரும்பியதாக தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த நாள் முதல் பலருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக நிதியுதவி வழங்கியவர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தாய் என்ற அமைப்பின் மூலம் பலருக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவுகிறார். இதற்காக பலர் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் அசோக் நகரில் இவர் நடத்தி வரும் டிரஸ்ட்டில் உள்ள 18 குழந்தைகளுக்கும், 3 ஊழியர்கள் மற்றும் 2 மாற்று திறனாளி பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர்கள் யாவரும் குணமடைந்ததாக கூறி ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் உங்கள் அனைவரிடமும் ஒரு நல்ல விஷயத்தை பகிர விரும்புகிறேன். கொரோனா நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த எனது டிரஸ்ட்டில் உள்ள குழந்தைகளுக்கு மீண்டும் நடத்திய பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், டிரஸ்டுக்குள் குழந்தைகள் திரும்பி வந்ததாகவும் கூறியுள்ளார். இந்த சூழலில் உடனடியாக உதவி செய்த அமைச்சர் எஸ். பி. வேலுமணி அவர்களுக்கு . மற்றும் மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் குமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் அயராது உழைக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். எனது சேவையே குழந்தைகளை காப்பாற்றியது என நம்புகிறேன். குழந்தைகள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.
My kids are safely recovered from Coronavirus@SPVelumanicbe pic.twitter.com/nXC07q46RI
— Raghava Lawrence (@offl_Lawrence) June 4, 2020