கதறி அழுத குடும்பத்திற்கு உதவ அரசிடம் வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ்.!
குஜராத்தில் உள்ள ராஜ்கோட் கலெக்டர் அந்த குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் பலர் இந்த ஊரடங்கால் பசி பட்டினியால் வாடி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தில் வேலைக்கு சென்ற தமிழ் குடும்பம் ஒன்று தாங்கள் இரண்டு மாதங்களாக பசியால் வாடுவதாகவும், குழந்தைகளுக்கு பால் வாங்க காசு இல்லை என்றும், வெளியே சென்றால் போலீஸ்காரர்கள் அடிப்பதாகவும், எனவே தமிழகத்திற்கு எங்களை கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கண்ணீருடன் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனை சுட்டி காட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் இவர்களுக்கு உதவ வேண்டும் என்றும், என்னுடைய தரப்பிலிருந்து ஏதாவது உதவி வேண்டுமெனில் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது குஜராத்தில் உள்ள ராஜ்கோட் கலெக்டர் அந்த குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் தமிழகத்திற்கு செல்ல விரும்பினால் குஜராத் அரசு அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு ராகவா லாரன்ஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்த ராஜ்கோட் கலெக்டருக்கும், குஜராத் முதல்வருக்கும் நன்றியை தெரிவித்ததோடு, அந்த குடும்பம் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
My sincere thanks to @CMOGuj @CollectorRjt for taking immediate steps to help them and arrange transportation for them to reach Tamilnadu, Happy that now the family is safe, Raghavendra Swami will be there with the family and support them. Service is God ❤️ https://t.co/2bssoeO0pU
— Raghava Lawrence (@offl_Lawrence) May 16, 2020