கடின உழைப்பு மற்றும் எளிமையால் அனைவருக்கும் குருவாக உள்ளார் ரஜினிகாந்த் – ராகவா லாரன்ஸ்.!

Default Image

ரஜினியின் 45 ஆண்டு கால திரையுலகை பயணத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ராகவா லாரன்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 45 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 15ம் தேதி பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தின் முதல் நடிகராக அறிமுகமாகி தற்போது சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் உச்சத்திற்கு வளர்ந்துள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்த் திரையுலகில் 45 வருடங்கள் வெற்றிகரமாக முடித்த நிலையில், அதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அதில் முதற்கட்டமாக மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து #48YearsOfRajinismCDP என்ற ஹேஷ்டேக்குடன் Common DPயை வெளியிட்டு இதுவரை யாரும் செய்யாத சாதனையை படைத்தது. இந்த நிலையில் தற்போது நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் பாதம் கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ரஜினிகாந்தின் 45 ஆண்டு திரையுலக பயணத்தை தமிழ் திரையுலகமே வேற லெவலில் கொண்டாடி வருகிறது. இதை கண்டு அவரது ரசிகராக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும், பெருமிதம் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரது கடின உழைப்பு மற்றும் எளிமை காரணமாக அனைவருக்கும் ஒரு குருவாக உள்ளார் என்றும், அவரது நல்ல ஆரோக்கியத்திற்கு தான் ராகவேந்திரா சுவாமியிடம் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்