சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்” படத்தில் இணைந்த ராதிகா.!
சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் பிரபல நடிகையான ராதிகா சரத்குமார் இணைந்துள்ளார்.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ . இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில் , ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தின் மூன்று லுக் போஸ்ட்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் விறு விறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தில் பிரபல நடிகையான ராதிகா சரத்குமார் இணைந்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் காலையில் சூர்யாவுடன் காஃபி அருந்தும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதன் மூலம் ராதிகா நடித்து வருவது உறுதி படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல், நடிகை ராதிகா, சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” மற்றும் அருண் விஜயின் 33 வது படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Morning coffee, workout amd chat with the handsome @Suriya_offl ,perfect morning ❤️❤️ pic.twitter.com/WQr177udBd
— Radikaa Sarathkumar (@realradikaa) August 11, 2021