எதுக்கு மன்னிப்பு கேட்கனும்!? அதலாம் கேட்க முடியாது…!
மன்னிப்பு கேட்டால் டப்பிங் யூனியனில் மீண்டும் சேர்த்துக்கொள்கிறோம் என்று கூறிய ராதாரயின் காலில் விழுந்தோ அல்லது வீட்டுக்கு சென்றோ மன்னிப்பு கேட்க முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.
2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கு நடிகர் ராதாரவி தலைவராக இருந்து வருகிறார். இந்த சங்கத்தின் நிர்வாகக்குழுவின் பதவிக் காலமனது முடிவடைந்ததால் விருகம்பாக்கத்தில் உள்ள திருமன மண்டபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட பாடகி சின்மயி வேட்புமனு தாக்கல் செய்தார் ஆனால் டப்பிங் யூனியாலிருந்து அவர் நீக்கப்பட்டதாக கூறி அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டது இதனால் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.இதில் ஓட்டு போட்டுவிட்டு செய்தியாளர்களை சந்தித்த ராதரவி சின்மயி மன்னிப்பு கேட்டால் டப்பிங் யூனியனில் மீண்டும் சேர்த்துக்கொள்வோம் என்று கூறினார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக சின்மயி ‘ராதாரவி காலில் விழுந்தோ அல்லது வீட்டுக்கு சென்றோ மன்னிப்பு கேட்க முடியாது. சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை எதிர்கொள்வேன் என்று கூறினார்.