பிரபாஸின் ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் ஒரே நாளில் 6.3மில்லியனுக்கு மேல் ட்வீட்களை பெற்று நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
பாகுபலி திரைப்படத்தின் மூலம் பின்னர் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். கடைசியாக சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ் அவர்களின் 20வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்றைய தினம் வெளியாகியது. ஏற்கனவே ஊரடங்கிற்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது’ராதே ஷ்யாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் இந்தப் படத்தினை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் டி. சீரிஸ் இணைந்து தயாரிக்கிறது.
மேலும் சச்சின் கெடேகர், பாக்ய ஸ்ரீ, பிரியதர்ஷி, சாஷா சேத்ரி, சத்யன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டிலுடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. இந்த டைட்டிலை #RADHESHYAM என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிரெண்ட் செய்து வந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்த டைட்டில் மட்டும் 6.3மில்லியனுக்கு மேல் ட்வீட்களை பெற்று மற்ற படங்களை விட இந்தியாவின் நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…