விஜய் சேதுபதி படத்தில் இணைந்த ராஷிகன்னா.!
அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் துக்ளக் தர்பார்.இந்த படத்தின் 50% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த அதிதி ராவ் கால்ஷீட் பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகியுள்ளார்.தற்போது இந்த படத்தின் கதாநாயகியாக ராஷி கன்னா ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.