குடும்பத்தோடு வாங்க …”வீட்டுல விசேஷம்” போஸ்டரை வெளியிட்ட ஆர். ஜே. பாலாஜி.!

நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இயக்கிய எல் கே ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி ஒரு படத்தை ரீமேக் செய்து இயக்கி நடிக்கிறார்.
அதாவது கடந்த, 2018 ஆண்டு இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம் பதாய் ஹோ. ஆயுஷ்மான் குர்ரானா, நீனா குப்தா, சன்யா மல்ஹோத்ரா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தான் ஆர்ஜேபாலாஜி தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்த ரிமேக்கிற்கு “வீட்டுல விசேஷம்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில், இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டு அத்துடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#வீட்லவிசேஷம் ❤️#VeetlaVishesham ????
Get ready for the craziest family entertainer of 2022 !
June 17th only in theatres! #NJSaravanan@BoneyKapoor @mynameisraahul@ZeeStudios_ @BayViewProjOffl @SureshChandraa @karthikmuthu14 @aparnabala2 @ggirishh @EditorSelva @pavijaypoet pic.twitter.com/y0m5Kk4YHG— RJ Balaji (@RJ_Balaji) March 18, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025