இலங்கை குண்டு வெடிப்பு : வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைது

Default Image

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிறன்று (ஏப்ரல் 21 ஆம் தேதி) இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர்  உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல்  காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தற்போது இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரரை ராணுவம் கைது செய்துள்ளது.மேலும் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்