இரண்டாவது படத்திலேயே இயக்குனர் அவதாரம் எடுத்த கதாநாயகன் ஆர்.ஜே.பாலாஜி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ரேடியோ வர்ணனையாளர், தமிழ் திரைப்பட காமெடி நடிகர் என பன்முகம் கொண்ட ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் எல்.கே.ஜி. அந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஆர்.ஜே.பாலாஜி எழுதியிருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. படமும் நல்ல வசூலை ஈட்டியது. இந்த படத்தை கோமாளி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் தயாரித்திருந்தது.
மீண்டும் ஆர்.ஜே.பாலாஜி முதன்மை வேடத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இதே வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறதாம்.