கோடைக்கால ராயல் கார்டன் விருந்து நிகழ்ச்சியில் பிரிட்டன் ராணி எலிசபெத் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிப்பு.
உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக ஓய்வில் உள்ள பிரிட்டன் ராணி எலிசபெத், ஆண்டுதோறும் நடக்கும் கோடைக்கால ராயல் கார்டன் விருந்து நிகழ்ச்சியில் இந்தாண்டு கலந்துகொள்ள மாட்டார் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இதனால் ராயல் கார்டன் விருந்தில் ராணிக்கு பதிலாக அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
96 வயதான பிரிட்டன் ராணி எலிசபெத், சமீப மாதங்களில் இயக்கம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.ன் பொதுவாக ஒவ்வொரு கோடையிலும் பக்கிங்ஹாம் அரண்மனை தோட்டத்தில் மூன்று கார்டன் பார்ட்டிகள் இருக்கும், அதே போல் எடின்பரோவில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் நடைபெறும்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் மூன்று நிகழ்வுகள் இந்த மாதத்தின் மே 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஹோலிரூட்ஹவுஸ் பார்ட்டி ஜூன் 29 அன்று நடைபெறுகிறது. இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரிட்டன் ராணி எலிசபெத் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…