பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக லாஸ்லியாவின் #Friendship படத்திலிருந்து வெளியான தரமான வீடியோ.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ஷிப் படத்திலிருந்து பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ஷிப் படத்தினை ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர்.
மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் டி. எம். உதயகுமார் இசையமைத்துள்ளார். இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரண்ஷிப் படக்குழுவினர் படத்திலிருந்து வீடியோவை வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்தனர். அந்த வகையில் தற்போது பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக பிரண்ஷிப் படத்திலிருந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தரமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…
February 12, 2025![Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jasprit-Bumrah-Varun-chakaravarthy-Yashasvi-jaiswal.webp)
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)