குவாட் நாடுகள் முடிவு : உலக நாடுகளுக்கு 120 கோடி கொரோனா தடுப்பூசி நன்கொடை …!

உலக நாடுகளுக்கு 120 கோடி கொரோனா தடுப்பூசி நன்கொடையாக வழங்க குவாட் நாடுகள் முடிவு செய்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டுள்ள உச்சி மாநாடு அமெரிக்கா வாஷிங்டனில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், நான்கு நாடுகளும் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளது.
அதில், இந்தோ-பசிபிக் மண்டல பகுதிகளுக்கு இதுவரை 7.9 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர உலகம் முழுவதும் மேலும் 120 கோடி கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக அளிக்க இருக்கிறோம் என உறுதி அளித்துள்ளது. மேலும் அடுத்ததாக வரவுள்ள பெருந்தொற்றை சிறந்த முறையில் கையாள்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025