குவாட் உச்சி மாநாடு:ஜப்பான் சென்ற பிரதமர் – மோடி…மோடி…என ஒலித்த குரல்கள்!
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி,டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தார்.இந்நிலையில்,ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி,தனி விமானம் மூலம் இன்று அதிகாலை டோக்கியோ சென்றடைந்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்ற நிலையில்,அவருக்கு ஜப்பான் வாழ் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடி இன்றும் ,நாளையும் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்கிறார்.
#WATCH | Japan: Indian diaspora in Tokyo calls PM Modi “Bharat Ma Ka Sher” as they hail him with chants and placards.
PM Modi will be participating in Quad Leaders’ Summit as part of his 2-day tour starting today, May 23. pic.twitter.com/aIQ8gyE62V
— ANI (@ANI) May 23, 2022
இதனையடுத்து,மே 24 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில்,இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் சர்வதேச சவால்கள் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து,குவாட் உச்சி மாநாட்டில் இரண்டாவது முறையாக பங்கேற்பது மட்டுமின்றி,பிரதமர் மோடி அவர்கள்,அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஆண்டனி ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தவுள்ளார்.அதன்பின்னர்,ஜப்பானிய வர்த்தக சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்தித்து பிரதமர் மோடி உரையாடவுள்ளார்.
குவாட் உச்சி மாநாடு என்பது ஆஸ்திரேலியா,இந்தியா,ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு மூலோபாய பாதுகாப்பு, ஜனநாயகம்,சர்வதேச சட்டம்,விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு உரையாடலைக் குறிக்கிறது.