லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேமினால் கட்டார் ராஜினாமா! காரணம் என்ன?
லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேமினால் கட்டார் ராஜினாமா.
பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2750 டன் எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதால், பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் பாலா உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து அந்நாட்டையை உருகுலைத்துள்ள நிலையில், லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேமினால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். அம்மோனியம் நைட்ரேட் வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா என தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏற்கனவே தகவல்துறை அமைச்சர் மானல் அப்டேல் சமத் பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.