அமெரிக்க மக்களிடம் அதிக அளவில் பிரபலமாகிய டிக்டாக் செயலி மூலம் தகவல் கசிய வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு நிபுணர்களும் எச்சரித்துள்ளனர். இதனால், சீனாவின் பைட்டான் நிறுவனத்தின் சொந்தமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்யப்படும் என அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். டிக் டாக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், டிக்டாக்கை அமெரிக்காவிலிருந்து தடைசெய்யயும் ஆணையில் கையெழுத்திடுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெரிவித்ததாக என்.பி.சி செய்தி வெளியிட்டது. இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து பைட்டான்ஸ் நிறுவனம் வெளியேறிய பின்னர், மைக்ரோசாப்ட் டிக்டாக்கைக் கைப்பற்றும் என கூறப்பட்டது.
அதற்கேற்றாற்போல டிக்டாக்கை அமெரிக்காவில் நிர்வகிக்கும் உரிமையை பெறுவதற்கு மைக்ரோசாஃப்ட் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. அமெரிக்காவில் இருந்து பைட்டான்ஸ் வெளியேறினால் அங்கு உள்ள சில பைட்டான்ஸ் முதலீட்டாளர்களுக்கு சிறு பங்குகளை கொடுக்கப்படும் என கூறப்பட்டது.
பைட்டான்ஸின் வெளிமுதலீட்டாளர்களில் சுமார் 70% அமெரிக்காவை சார்ந்தவர்கள். இந்நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பைட்டான்ஸின் புதிய திட்டத்தின் கீழ், அனைத்து அமெரிக்க பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் பொறுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பைட்டான்ஸின் புதிய ஒப்பந்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொள்வாரா..? என்பது தெரியவில்லை,மேலும் மைக்ரோசாப்ட் இதுகுறித்து கருத்து கூறவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
100 மில்லியன் அமெரிக்கர்களை கொண்ட டிக்டாக் இந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 1,000 பேரை வேலையில் அமர்த்தி உள்ளது.மேலும் 10,000 பேரை அமெரிக்கா முழுவதும் வேலைகளில் அமர்த்துவதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…