சிந்துவை ரூ.50 கோடிக்கு தூக்கிய சீனா…!சிகரம் தொடும் சிந்து..!
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து சமீபத்தில் தான் ரியோ ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போன்ற போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தனக்கென பேட்மிட்டன் உலகில் சாதனை படைத்தார்.இந்நிலையில் அவரை சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான லி நிங் என்ற நிறுவனம் ரூ.50 கோடிக்கு பிவி சிந்துவை விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது.இதில் அவர் நான்கு வருடத்திற்கான விளம்பர ஒப்பந்தத்தில் சிந்து கையெழுத்திட்டுள்ளார்
உலக பேட்மிண்டனில் வரலாற்றில் கையெழுத்திடப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தங்களில் பிவி சிந்துவின் ஒப்பந்தமும் ஒரு முக்கியமான ஒன்றாகும்.மேலும் இந்த ரூ.50 கோடியில் மட்டும் ரூ.40 கோடி ஸ்பான்சர்ஷிப் மற்றும் ரூ. 10 கோடி அளவில் விளையாட்டு உபகரணங்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது என்று அந்நிறுவனத்தின் பிரத்தியேக பங்குதார் மகேந்தர் கபூர் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தத்திற்கான தொகை பூமா நிறுவனம் இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கு வழங்கி வரும் தொகைக்கு இணையானதாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும் 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் போட்டிக்கான உடைகள் மற்றும் காலணி ஆகியவற்றை இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்நிறுவனம் ஆனது வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.