மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்!
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் ஸ்பெயினின் கரோலினா மரின் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றிபெற்றார். ஸ்பெயினின் கரோலினா மரினை 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.