ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் கடுமையாக போராடி,இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து தோல்வி
ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் கடுமையாக போராடி,இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து தோல்வி கண்டார்.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி சிந்து, ஜப்பான் நாட்டு விராங்கனை அகானே யாமாகுச்சியை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே கடுமையாக போராடிய சிந்து, 21-19, 19-21, 18-21 என்கிற செட் கணக்கில் நூலிழையில் தோல்வியை கண்டார். முதல் செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, கடைசி இரு செட்களில் வெற்றிவாய்ப்பை இழந்தது, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.