புஷ்பா படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர லுக் போஸ்டர் வெளியீடு.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தை பிரபல இயக்குனரான சுகுமார் இயக்குகிறார். படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடித்துள்ளார்.
ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த முதல் பாகம் வரும் டிசம்பர் 25 – ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தற்போது படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரத்திற்கான முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் அவர் ஸ்ரீவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் இதுவரை இல்லாத விதமாக கிராமத்து பெண்ணாக இருக்கிறார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…