ஓடிடியில் வெளியாகும் புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் …!

கன்னட திரையுலகின் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவரது உயிரிழப்பு இந்திய திரையுலகினரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் இவர் உயிருடன் இருந்த பொழுது ஜேம்ஸ் எனும் படத்தில் நடித்து முடித்து இருந்தார்.
இந்த படம் கடந்த மார்ச் 17ஆம் தேதி புனித் ராஜ்குமாரின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த படத்திற்கான டிஜிட்டல் உரிமையை சோனி லைவ் ஓடிடி தளம் பெற்றுள்ளது. இதனையடுத்து புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14 ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025