பைக் ஸ்டண்ட் காட்சிகளுடன் வலிமை படத்தின் டீசர் தயாராக வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அஜித்- எச்.வினோத் – போனிகபூர்- யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் “வலிமை”. அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் வலிமை டீசர் மற்றும் இரண்டாம் பாடலுக்காக காத்துள்ளனர்.
இந்நிலையில், ரசிகர்களை உற்சகப்படுத்தும் வகையில், வலிமை பட டீசர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வலிமை திரைப்படதின் டீசர் இந்த வாரம் வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இதனையடுத்து இந்த வாரம் வெளியாகும் டீசரில் பைக் ஸ்டண்ட் காட்சி இருப்பதாகவும், அதில் அஜித் ஒரு பஞ்ச் டயலாக் பேசுவது போல கட்சியும் மிரட்டல் தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். விரைவில் வலிமை படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …