முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய்….!!!
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய கவலையை சரும பிரச்சனைகள் தான். இதற்காக பல மருத்துவ முறைகளை கையாண்டாலும், முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. சிலருக்கு இதன் காரணமாக பல பக்க விளைவுகள் ஏற்பட கூட செய்கிறது.
சரும பிரச்சனைகளுக்கான வழிகள் :
கருவளையம் :
பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைத்தால், கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
முக பருக்கள் :
பூசணிக்காயின் கூழை, முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது பால் மற்றும் தென் சேர்த்து நன்கு கலந்து கொண்டு, அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் அழகாக காணப்படும்.
முக எண்ணெய் பசை :
பூசணிக்காயை நன்கு மசித்து, அதில் தென் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.
முகக்கருமை நீங்க :
முகம் கருப்பாக காணப்பட்டால், அதனை போக்குவதற்கு, பூசணிக்காய் கூழுடன், சிறிது சர்க்கரை மற்றும் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் கழுவினால், முகத்தில் உள்ள கருமை நிறம் மங்குவதோடு, பருக்கள் நீங்கி, கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.