புல்வாமா தாக்குதல்:மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா. சபையிடம் வலியுறுத்தப்படும் !!ரஷ்யா அறிவிப்பு
- ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- தாக்குதல் சம்பவம் தொடர்பாக மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா. சபையிடம் வலியுறுத்தப்படும் என்று ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதனால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வருகிறது.
இந்நிலையில் புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா. சபையிடம் வலியுறுத்தப்படும் என்று ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.