புல்வாமா தாக்குதல்: ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் சகோதரர் உட்பட 44 பேர் பாகிஸ்தானில் கைது !!

Default Image
  • புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
  • ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் சகோதரர் அப்துல் ரவுப் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவராக கடந்த பல வருடங்களாக பயங்கரவாத செயல்களை செய்து வருபவன் மசூத் அசார். இந்திய சிறையில் இருந்து கடந்த 1999ஆம் ஆண்டு காந்தகார் விமான கடத்தல் மூலமாக விடுவிக்கப்பட்டவன் மசூத் அசார். இதன் பின்னர் இந்தியாவின் மீதான பல்வேறு தாக்குதல்களை தலைமை கொண்டு நடத்தியவன் இவன்.

Related image

 

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின்  மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை  அழித்தது.

பின் பிப்ரவரி-27 ஆம் தேதி பாகிஸ்தான் விமானப்படை விமானமான  F16  இந்தியாவிற்குள் அத்துமீறியபோது இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானத்தால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.ஆனால் அந்த தாக்குதலின்போது மிக் 21 போர் விமானத்தை காணவில்லை.அதேபோல் விமானியையும் காணவில்லை.

பாகிஸ்தானிடம் இது தொடர்பாக கேட்டபோது,  விமானி அபிநந்தன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தது.பின்னர் விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் இருக்கும் நிலையில் அவரை மீட்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

 

இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வெளியிட்டார்.அதில் அபிநந்தன் நேற்று (மார்ச் 1-ஆம் தேதி) விடுவிக்கப்படுவார்.இம்ரான் கான் அறிவித்தவுடன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர்.

அதன்படி மார்ச் 1-ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூா் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், லாகூரில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு காா் மூலம் அழைத்து வரப்பட்டாா்.இருநாட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடா்ந்து அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டாா்.தற்போது அபிநந்தன் மருத்துவசிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் சகோதரர் அப்துல் ரவுப் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 44 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

hmpv live
Rajinikanth
earthquake nepal
mk stalin net exam
Kanguva
hmpv Ma. Subramanian
icc bgt 2024 2025