அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகம் ஆண்டுதோறும், உலகில் ஊடகத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்நிலையில் 105-வது ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட லண்டனை சேர்ந்த பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலனுக்கு உலகின் புகழ்பெற்ற ‘புலிட்சர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் இஸ்லாமிய மக்களை முகாம்களில் அடைத்துவைத்து சீன அரசு கொடுமைப்படுத்தி வந்துள்ளது.
இவர்களை பயங்கரவாதத்துக்கு எதிராக போராட பயிற்சியளிப்பதற்காக அம்மக்களை முகாம்களில் தங்க வைத்துள்ளதாக போலியான ஒரு காரணத்தை சீனா கூறியது. இந்நிலையில், சீனாவின் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் குறித்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டார். இதற்காக, மேகா ராஜகோபாலனுக்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற புலிட்சர் விருதை பெற்றுள்ளார். இவர், BuzzFeed என்ற பத்திரிக்கையில் ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…