பீதியில் புதுச்சேரி மக்கள்…!அச்சுறுத்தும் கொள்ளையர்களின் அடையாள குறியீடு …!
புதுச்சேரியில் சாரம் பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் பொம்மை படம் போட்ட குறியீடுகள் இருந்ததால் மக்கள் பீதியில் உள்ளனர்.வடமாநில கொள்ளை கும்பல்கள் தாங்கள் கொள்ளையடிக்கும் வீடுகளில் இது போன்று பொம்மை படம் போட்ட குறியீடுகள் வரைந்து இருக்கலாம் என மக்கள் சந்தேகம் அடைந்து உள்ளனர்.
புதுச்சேரியில் மையப்பகுதியில் அமைந்து உள்ள சாரம் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட மாடிவீடுகள் உள்ளன. அங்கு 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் பொம்மை படம் போட்ட குறியீடுகள் இருந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.
மொம்மை படம் குறித்து பொதுமக்கள் காவல் துறையிடம் தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இந்த குறியீடுகளை யாரு போட்டது? எப்போது போட்டார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன் இந்த சாரம் பகுதியில் 5 ஐந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதாக பொது மக்கள் புகார் கொடுத்து இருந்தனர். இந்த இருசக்கர வாகனங்களை திருடியவர்களுக்கும் , பொம்மை படம் போட்ட குறியீடுகளை வரைந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அங்கு உள்ள சிசிடிவி கேமராவையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குறியீடுகளை அப்போது போட்டார்கள் என்று தெரியவில்லை. யாரு எனவும் போட்டது? ஆண்கள் அனைவரும் வேலைக்கு செல்வதால் வீடுகளில் குழந்தை ,பெண்கள் மட்டுமே உள்ளோம் .
இந்த பொம்மை படம் போட்ட குறியீடுகள் வீடு மட்டுமல்லாமல் அனைத்து வீடுகளில் உள்ளவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து காவல் காத்து வருவதாக கூறினர். மக்களை பீதியடைய வைத்து உள்ள இந்த குறியீடுகளை குறித்து சாரம் காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் மதுரையில் நடந்த அனைத்து கொள்ளை சம்பவங்களும் இது போன்று குறியீடுகளை கொண்ட வீடுகளில் தான் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல் துறை சார்பில் கூறப்பட்டது.இந்நிலையில் பொம்மை படம் போட்ட குறியீடுகள் சாரம் பகுதி வீடுகளில் இருந்ததால் மக்கள் பீதியில் உள்ளனர்.