கண்ணியத்தை காப்பாற்றிக்கொள்ளுங்கள்… கடிதம் மூலம் நாராயணசாமியை எச்சரித்த கிரேண் பேடி.

Default Image
  •  மத்திய அரசின் பணியாளர் நலத்துறை சார்பில் நடத்திய ஆய்வில், சிறிய மாநிலங்களில் நிர்வாகம், கல்வி, மருத்துவம், சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில் முதல் இடங்களை புதுச்சேரி மாநிலம் பெற்றுள்ளது.
  • இது குறித்து கருத்து தெரிவித்த புதுவை முதல்வர் திரு.நாராயணசாமி புதுவை ஆளுநர் மற்றும் மத்திய அரசை விமர்சித்து பேசியிருந்தார். 

இந்நிலையில்  புதுச்சேரி மாநில முதல்வர் என்ற கண்ணியத்தை இழந்து எல்லை மீறி பேசுவதாகவும், அதனை மாற்றிக்கொள்ள வேண்டுமெனக்கூறி முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக மின்னஞ்சல் மூலமாக முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எழுதியுள்ள கடிதத்தில், புதுச்சேரி ஆளுநரான என்னையும், அரசியலமைப்பு அலுவலகமாக உள்ள ஆளுநர் மாளிகையையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, தரக்குறைவாக நீங்கள் பேசுகின்றீர்கள். மேலும், சில தினங்களாகவே  எல்லைமீறி உங்கள்  கண்ணியத்தை இழந்து பேசிகின்றீர்கள். ஒரு குற்றச்சாட்டுகளை கூறும் போது அதை ஏற்க மறுக்கவில்லை எனில், அது குற்றம் சாட்டுபவரைத்தான் சேரும் என்று மகான் புத்தர் கூறியதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். முதல்வர் அலுவலகம் என்ற கண்ணியத்தை காப்பாற்றி கொள்ளுங்கள். ஆளுநர் மாளிகையை தாங்கள் மோசமாக பேசுவதை மக்கள் யாரும்  ஏற்கவில்லை.
எனவே அத்தகைய மோசமான நடத்தையிலிருந்து நீங்கள் விலகுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.புதுச்சேரி  துணைநிலை ஆளுநர் அலுவலகம் முற்றிலும் புதுச்சேரி மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படுகின்றது. கருத்து வேறுபாடுகளை கண்ணியமான முறையில் கூற தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தர நான் விரும்புகிறேன் என அந்த கடிதத்தில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தால் புதுவை மாநிலத்தில் முதல்வர் ஆளுநர் மோதல் வலுத்துள்ளதாக அம்மாநில மக்கள் கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்