புதுச்சேரி புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்..!
மறைந்த திமுக கட்சியின் தலைவர் மு கருணாநிதி அவர்களின் பெயர் புதுச்சேரி மாநில காரைக்கால் – புறவழிச்சாலைக்கு சூட்ட அம்மாநில ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்ட ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார் .மேலும் புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி சிலை முதல் ராஜிவ்காந்தி சிலை வரை உள்ள சாலைக்கும் கருணாநிதியின் பெயர் சூட்ட அனுமதி அளித்து உள்ளார் இதனால் இனி இந்த சாலைகள் கருணாநிதி பெயர் கொண்டு செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.