3 மணி வரை PUBG, அதிகாலையிலோ பிணமாக கிடந்த 14வயது சிறுவன்.!
ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் 14வயது சிறுவன் ஒருவன் கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போது, அந்த சிறுவன் தொடர்ந்து மூன்று நாட்களாக PUBG விளையாடி வந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் விசாரணையின் படி, சிறுவன் அதிகாலை 3 மணி வரை தனது சகோதரர் படித்து கொண்டிருந்த அறையில் PUBG விளையாடி கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் அவர் தூங்குவதற்காக மற்றொரு அறைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் தான் தமிழகத்தில் PUBG விளையாடி ஒரு சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் ஊரடங்கில் உள்ள குழந்தைகள் பொழுதை போக்க கைப்பேசிகளை உபயோகப்படுத்துவது அதிகரித்துள்ளது.இதனால் அவர்கள் PUBG , FREE FIRE போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கியுள்ளனர் .இதை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிப்பது அவசியம்.