போலீசிடமிருந்து தப்பிக்க PUBG பாணியில் உருமாற்றம்!

நாடு முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் சகஜமாக வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீறி வெளியில் செல்பவர்களுக்கு போலீசாரால் பிரம்படி தாராளமாக கொடுக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்டிவினைச் எனும் நகரில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வெளியில் கடைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்நகரை சேர்ந்த ஒருவர் கடையில் தனக்கு தேவையான பொருளை வாங்குவதற்கு செல்வதற்காக, போலீசாரிடம் இருந்து தப்புவதற்காகவும் மரச்செடி போல தன்னை மாற்றிக்கொண்டு பதுங்கி பதுங்கி ரோடுகளில் செல்கிறார். அதன் பின்பு சிறிது நேரம் கழித்து எதோ ஒரு பொருளை வாங்கி வந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025