பப்ஜி விளையாட்டு தென் கொரிய கம்பெனி மூலம் உருவாக்கப்பட்டதால் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.
இந்திய-சீன எல்லை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபிறகு, சீன நிறுவனங்களின் மொபைல் ஆப்களான டிக் டாக், ஹலோ, யூசி பிரௌசர் போன்ற 59 மொபைல் ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பொது ஒழுங்கை பாதிக்கும்படியாக இந்த ஆப்கள் இருப்பதால் இதனை தடை செய்வதாக அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டது.
ஆனால், பப்ஜி மற்றும் கால் ஆஃ டியூடி ஆகிய மொபைல் ஆப்கள் மட்டும் ஏன் இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை என பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள் எழுந்தன.
அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது, பப்ஜி சீனாவை சேர்ந்தது அல்ல. பப்ஜி விளையாட்டானது, உருவாக்கப்பட்டது தென்கொரியாவில் உள்ள ப்ளுஹோல் நிறுவனத்தின் துணை நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் மூலமாக சீனாவில் பப்ஜி விளையாட்டு கொண்டுவரப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகே, பப்ஜி விளையாட்டு சீனாவில் இருந்து இந்தியா வந்தடைந்தது.
அதேபோல டென்ஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிமி ஸ்டூடியோஸ் உடன் கூட்டு சேர்ந்து கால் ஆஃப் டியூட்டி மொபைல் ஆப் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமான கலிபோர்னியாவை சேர்ந்தது ஆகும். பப்ஜி, கால் ஆஃப் டியூட்டி ஆகிய இவ்விரண்டு ஆப்களும் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை என செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…