தென் இந்திய நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படம் 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தை டபுள் மீனீங் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான சைமா 2020-ல் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அவை சிறந்த இயக்கம் (மிஷ்கின்), முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகர் (உதயநிதி ஸ்டாலின்), சிறந்த இசை (இளையராஜா), சிறந்த பாடல் – உன்ன நினைச்சு (கபிலன்), சிறந்த பின்னணி பாடகர் ஆண் – உன்ன நினைச்சு (சித் ஸ்ரீராம்), சிறந்த அறிமுக தயாரிப்பாளர் (டபுள் மீனீங் புரடக்ஷன்ஸ்), சிறந்த ஒளிப்பதிவு (தன்வீர் மிர்), சிறந்த வில்லன் (ராஜ்குமார் பிச்சுமணி), சிறந்த அறிமுக நடிகர்(ராஜ்குமார் பிச்சுமணி) ஆகிய 9 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சைமா 2020 விருது விழா ஹைதராபாத்தில் வரும் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…