படத்தின் புரோமோஷனுக்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய சைக்கோ இயக்குனர்.!

- பிரபல இயக்குநர் மிஷ்கின், திரைப்படம் ஒன்றின் போஸ்டரை தெருவில் இறங்கி ஓட்டிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு 66வது தேசிய விருது வழங்கப்பட்ட பாரம் திரைப்படத்தை பிரியா கிருஷ்ணசுவாமி என்ற பெண் இயக்கி இருக்கிறார். இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மிக சிறந்த படம் என்று தேசிய விருதில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலையில் பாரம் திரைப்படம் 21ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே படத்தின் புரோமோஷனுக்கு இயக்குனர் மிஸ்கின் இறங்கி வேலை செய்திருக்கிறார். அதாவது பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கி பாரம் திரைப்படம் வெளியானதை அடுத்து அப்படத்தின் போஸ்டரை அண்மையில் இயக்குனர் மிஷ்கின் தெருவில் இறங்கி ஓட்டியுள்ளார்.
இந்நிலையில், அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். அக்காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவராலும் விரும்பி பகிரப்பட்டு வருகின்றன. இதனிடையே மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2ம் பாகத்தை விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படம் மிக பெரிய வெற்றியடைந்தால் துப்பறிவாளன் படத்திற்காக மிஸ்கின் சம்பளத்தை உயர்த்தி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025