திரைத்துறையினருக்கு குறைந்தபட்ச தளர்வுகளாவது அளிக்க வேண்டும்.!

திரைத்துறையினருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நேற்று தமிழக அரசானது, மத்திய அரசின் ஊரடங்கு தளர்வுகளின் படி தமிழகத்திற்கும் பலவேறு தளர்வுகளை அறிவித்தது. அதன் படி, தொழிற்சாலைகள், ஐடி கம்பெனிகள், கட்டட தொழிலாளர்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் என பலவற்றுக்கு விதிமுறைகளோடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தற்போது அதே போல திரைத்துறையினருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். மற்ற தொழில் துறையினருக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் போல திரைத்துறையினருக்கும் குறிப்பிட்ட தளர்வுகள் வழங்க வேண்டும் எனவும்,
அல்லது, குறைந்தபட்சமாக ஷூட்டிங் அல்லாத ரீ-ரெக்கார்டிங், டப்பிங் போன்ற பணிகளையாவது திரைத்துறையினர் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என திரைத்துறை தொழிலாளர் சங்க அமைப்பான ஃபெப்சி சார்பாக ஆர்.கே.செல்வமணி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025