இலங்கையில் ஜனாதிபதி மாளிகையில் உள்நுழைந்த போராட்டக்காரகர்கள், ஜனாதிபதி தப்பியோடியதை அடுத்து ஜனாதிபதி மாளிகையில் இருந்த நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் ஆடியுள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆதலால், பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக, நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, பொதுமக்களோடு எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகை முன்பு போராட்டக்காரர்கள் பல்வேறு தரப்பினர் குவிந்துள்ளனர்.
கூட்டத்தை கலைக்க இலங்கை காவல்துறை தண்ணீர் பாய்ச்சியும்,கண்ணீர் புகைக்குண்டு வீசியும் வந்தனர். எனினும்,போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் உள்நுழைந்துள்ளது விட்டனர். இந்த பரபரப்பான சூழலில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அரசு மாளிகையில் இருந்து தப்பியோடி ராணுவ தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் போராட்டக்கார்கள், ஜனாதிபதி மாளிகையில் இருந்த நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் ஆடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வெகு வைரலாகி வருகிறது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…