அதிபர் மாளிகை எங்களுக்கு வேண்டாம்… அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறிய போராட்டக்காரர்கள்…

Default Image

போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை விட்டு வெளியில் சென்றனர்.  தற்போது அந்த அதிபர் மாளிகை பாதுகாப்பு அதிகாரிகளின் வசமானது.

இலங்கை பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் கடந்த சில மாதங்களாகவே போராட்டத்தில் ஈடுபட தொடங்கி தற்போது வரை ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் போராட்டகாரர்கள் வீதியில் இறங்கி போராடியதோடு மட்டுமல்லாமல், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு அதனை கைப்பற்றினர். அங்கேயே உள்ளே தங்கிவிட்டனர்.

அவர்களை வெளியேற செய்ய பாதுகாப்பு துறையினரும் எந்தவித கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஏற்கனவே வெளியான தகவலின் படி, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை விட்டு வெளியில் சென்றனர்.

தற்போது அந்த அதிபர் மாளிகை பாதுகாப்பு அதிகாரிகளின் வசமானது. ஏற்கனவே அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பியோடி, மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக சவூதி அரேபியா சென்றுள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்