கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் உடலை புதைக்க எதிர்ப்பு! 5 பேர் மீது வழக்கு பதிவு!

கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் 5 பேர் மீது வழக்கு பதிவு.
ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் செவிலியர் அர்ச்சனா, கொரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து, நவல்பூர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், உடலை புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பொதுமக்களிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி, உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!
March 17, 2025
“ஒற்றுமையாகதான் இருக்கோம் யாரும் பிரிக்க முடியாது”.. செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இபிஎஸ் பதில்!
March 17, 2025