மாலை நேரத்தில் தேநீர் அருந்தும் போது உங்கள் குழந்தைகளுக்கு சுவையாகவும் சத்தாகவும் உள்ள ஒரு ரெசிபி செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இந்தப் பருப்பு புட்டை செய்து கொடுங்கள். அதிக புரோட்டீன் கொண்ட இந்த பருப்பு புட்டு குழந்தைகளுக்கு கொடுப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பருப்பு புட்டை எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் அனைத்து பருப்பு மற்றும் புழுங்கல் அரிசியை சேர்த்து 2 மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அவற்றை நன்றாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு நீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி அரைத்து வைத்துள்ள மாவை இட்லி தட்டில் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின் வேகவத்த பருப்பை எடுத்து புட்டு போல உதிர்த்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர் ஊற்றி அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு தயாரித்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். அடுத்ததாக வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள புட்டை நெய் வறுத்த முந்திரியுடன் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காய் சர்க்கரை பாகு ஏலக்காய் பவுடர் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கிளறி விட்டு இறக்கினால் அட்டகாசமான பருப்புக் புட்டு வீட்டிலேயே தயார். நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை இதைச் செய்து கொடுத்துப் பாருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…